நாகர்கோவில் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது 90 வகை அரிய பறவைகள் நடமாட்டம் கண்டுபிடிப்பு


நாகர்கோவில் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது 90 வகை அரிய பறவைகள் நடமாட்டம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:45 PM GMT (Updated: 4 Jan 2020 7:22 PM GMT)

நாகர்கோவில் அருகே பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 90 வகையான அரிய பறவையினங்கள் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. வனத்துறை அதிகாரி ஆனந்த் தலைமையில், உதவி வனப்பாதுகாவலர்கள் ஹேமலதா, இளையராஜா, வனச்சரகர் திலீபன், சுற்றுச்சூழல் ஆர்வலர் டேவிட்சன், பறவைகள் ஆர்வலர் ராபர்ட் கிரப், அவருடைய மனைவி சைலஜா கிரப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், உயிரியல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான படிப்புகளை படிக்கும் மாணவ- மாணவிகள் என 62 பேர் 7 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

90 வகை பறவைகள்

சுசீந்திரம், தேரூர் குளங்கள், மணக்குடி, ராஜாக்கமங்கலம், புத்தளம் உவர்நீர் பகுதிகள், பறக்கை பாறைக்காத்தான் குளம் மற்றும் மாணிக்கபுத்ே்தரி குளம், தத்தையார்குளம் ஆகிய பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது தொலைநோக்கிகள் மூலமும், நேரடியாகவும் பார்வையிட்டு அரியவகை பறவைகளை கணக்கெடுத்தனர்.

கணக்கெடுப்பின்போது பிளமிங்கோ என்று சொல்லக்கூடிய பூநாரை பறவைகள்தான் அதிக அளவில் காணப்பட்டன.

சில அரியவகை வெளிநாட்டு பறவைகளும் இந்த முறை கணக்கெடுப்பின்போது தென்பட்டன. மேலும் பின்டெயில், கார்னரி, சான்ட் பைப்பர், சில்ட், பெலிக்கான் போன்ற 90 வகை அரிய பறவைகள் நடமாட்டமும் கண்டுபிடிக்கப்பட்டன.

கணக்கெடுப்பு பணி அடுத்த மாதமும் நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story