மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம் + "||" + Relatives of Dharna struggle as a teenage girl gets raped

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான பழனிசாமி (வயது 65) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இளம்பெண்ணுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். உறவினர்களின் அனுமதியின்றி கரு கலைக்கப்பட்டதாக கூறிய அவர்கள் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த திடீர் போராட்டம் காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் 9-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் முஸ்லிம்கள் 9-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் கருப்புக்கொடி ஏந்தி முஸ்லிம் பெண்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று சேலத்தில் முஸ்லிம் பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது
நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை