மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு + "||" + Shake mode Reported to have acted as a prelude Female candidate cursed

குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு

குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு
திருப்பரங்குன்றத்தில் குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்குயில்குடி ஊராட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ேபாட்டியிட்ட பேச்சி, ஜோதி ஆகிய 2 பேரும் ஓட்டு எண்ணிக்கையில் தலா 85 ஓட்டுகள் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் நேற்று திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

இதில் ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆசிக் 2 சீட்டில் தனித்தனியாக 2 வேட்பாளர்களின் பெயரை எழுதி அதை சுருட்டி அவரே குலுக்கி எடுத்தார். அதில் பேச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். உடனே ஜோதி சம ஓட்டு வாங்கியவர்களுக்கு சம அளவில் குலுக்கல் சீட்டு தயார்படுத்தவில்லை. ஒரு சீட்டு பெரியதாகவும் மற்றொரு சீட்டு சிறியதாக உருவாக்கி இருந்தது. மேலும் அதை வெளி நபரான மற்றொருவரை எடுக்க சொல்லவில்லை.

வாக்கு எடுப்பில் அதிகாரி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி அவருக்கு வேண்டியவருக்கு சாதமாக செயல்பட்டார் என்று கூறி கண்ணீர் விட்டு தேம்பி, தேம்பி அழுதார். மேலும் அவர் பலத்த குரலுடன் தெய்வம் கேட்கும் என்று சாபமிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திரு நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேட்பாளர் ஜோதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்: மூதாட்டி உடல் தோண்டி எடுப்பு திருக்காட்டுப்பள்ளி அருகே பரபரப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதால் மூதாட்டி உடலை போலீசார் தோண்டி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பெண் வாடிக்கையாளர்களுடன் காம லீலை: “வங்கி அதிகாரியால் எனது உயிருக்கு ஆபத்து” போலீஸ் சூப்பிரண்டிடம் மனைவி பரபரப்பு புகார்
பெண் வாடிக்கையாளர்களுடன் காமலீலையில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மீது மனைவி புகார் அளித்தார். இந்த நிலையில் அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
3. பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார்
பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நடிகர் யோகிபாபு மீது புகார் கமிஷனர் அலுவலகத்தில் மனு
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீது, இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
5. கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இடத்தை தனி நபர்களுக்கு வழங்கியதாக கலெக்டரிடம் மனு
மேலூர் அருகே கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் தனியாருக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.