உலக நன்மைக்காக நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வேள்வி
உலக நன்மைக்காக நெல்லையப்பர் கோவிலில் நேற்று சிறப்பு வேள்வி நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் துவாபரயுக ஆரம்பத்தில் சுவேத கேது மகாராஜா மரண பயம் நீங்குவதற்காக மகா மிருத்யுஞ் ஜய மந்திரம் செய்தார். சுவாமியும் மனமிரங்கி சுவேத கேது மகாராஜாவுக்காக மீண்டும் காலசம்ஹாரம் (எமனை வெல்லுதல்) செய்தருளினார். இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக நேற்று மகா மிருத்யுஞ் ஜய மந்திர வேள்வி நடைபெற்றது.
சமுதாயத்தில் நல்லிணக்கம் ஓங்கி மக்கள் சகோதர உணர்வுடன் வாழவும், மக்கள் இறைவனின் பேரருளால் சகல வளங்களையும் பெற்று பேரின்பத்துடன் பெருவாழ்வு வாழவும் கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் செம்மையாக நடைபெறவும், கோவில்களில் உரிய காலத்தில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தவும் இந்த வேள்வி நடைபெற்றது.
இதில் அமைப்பாளர் ராஜகோபால், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநகர தலைவர் குணசீலன், மாநில செயற்குழு உறுப்பினர் குணதுரை மற்றும் திரளான பக்தர்கள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story