கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 5 Jan 2020 8:45 PM GMT)

கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கீழத்தாழனூர் கிராமத் தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ., தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் தலைவர் ராஜசேகர், திருக்கோவிலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.பழனி, நகர செயலாளர் கே.சுப்பு, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.அரியூர் கலையழகன், துறிஞ்சிப்பட்டு முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழத்தாழனூர் கூட்டுறவு சங்க தலைவர் தேவியகரம் என்.சேகர் வரவேற்றார்.

முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ, மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிச்சாமி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் காட்டுப்பையூர் ஏ.லட்சாதிபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஏ.சந்தோ‌‌ஷ், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பா, மாவட்ட பண்டக சாலை தலைவர் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் மாரங்கியூர் எம்.இளங்கோவன், என்.துரைராஜ், தங்க.பிரகா‌‌ஷ், பரசுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தி.மு.க.தடுத்தது. ஆனால் தடைகளை தாண்டி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிதொடரும் இந்த அரசு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.50 கோடியே 99 லட்சம் செலவில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 789 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 100- க்கு 99 திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனை உடனே தொடங்கியும் வைத்துவிட்டோம். குறைகேட்க செல்லும் இடமெல்லாம் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகையை பொதுமக்கள் கேட்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர்உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு உடன் பட்டா வழங்கப்படும். ஆட்சேபனை இருந்தால் மாற்று இடம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழாவில் மாவட்ட பேரவை இணைசெயலாளர் எஸ்.கே.டி.சி.அசோகன், திருக்கோவிலூர் கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளர் சிவனேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.தங்கராஜ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், என்.ஜெயபாலன், கூட்டுறவு சங்க இயக்குனர் பூபே‌‌ஷ் என்கிற சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், அசோக், நாதன்காடுவெட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகி சுபா‌‌ஷ், வக்கீல்கள் உமாசங்கர், எஸ்.பி.பார்த்தீபன், பாலகிரு‌‌ஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏசுபாதம், ஊராட்சி செயலாளர் அருணகிரி, சாங்கியம் ஞானமுர்த்தி, சிவசங்கரன், தங்க.அய்யப்பன், கீழத்தாழனூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார். விழாவை கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் லோகநாதன் தொகுத்து வழங்கினார்.

Next Story