குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று விளக்கம் அளித்த நிதின் கட்காரி
நாக்பூரில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களிடம் வீடு, வீடாக சென்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்தார்.
நாக்பூர்,
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. இந்த சட்டம் தொடர்பாக மக்களிடம் உள்ள சந்தேகங்களை போக்க அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி மராட்டியத்தின் நாக்பூர் நகரத்தில் நேற்று இந்த பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்திய மந்திரி நிதின் கட்காரி வீடு, வீடாக சென்று முஸ்லிம்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் இயற்கைக்கு முரணான கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்ற விரும்பினார்.
ஆனால் தற்போது மராட்டியத்தில் அமைந்து உள்ள அரசாங்கம் அதை எதிர்க்கிறது. அதிகாரத்துக்காக சிவசேனா இந்துத்வா கொள்கையை கைவிட்டு விட்டது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லை. எனவே அந்த கூட்டணி அரசாங்கம் நீடிப்பது கடினம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story