குமாரசாமி கடும் எதிர்ப்பு: ராமநகர் பெயரை மாற்றும் திட்டம் இல்லை; எடியூரப்பா அறிவிப்பு


குமாரசாமி கடும் எதிர்ப்பு: ராமநகர் பெயரை மாற்றும் திட்டம் இல்லை; எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 5:15 AM IST (Updated: 6 Jan 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

பெங்களூரு,

ராமநகர் மாவட்டத்திற்கு நவ பெங்களூரு என்று பெயரை மாற்றி, வளர்ச்சி அடைய செய்வதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றினால் போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநகர் மாவட்டத்தின் பெயரை மாற்றுவது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது ேதவையற்ற விவாதம். ராமநகர் பெயரை மாற்றும் திட்டம் இல்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் உண்மை இல்லாத விஷயம் குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ராமர் பற்றி எங்களுக்கு இருக்கும் அன்பு, பக்தியை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கு ராமர் மீது பக்தி வந்துவிட்டது அல்லவா?. ராமர் மீதான அவர்களின் பக்தி உண்மையாக இருந்தால், அதை நான் வரவேற்கிறேன். இல்லாத ஒரு விஷயம் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தது, நகைச்சுவையாக உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.


Next Story