மாவட்ட செய்திகள்

காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை + "||" + By the failure of love Transgender suicide by hanging

காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை

காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை
காதல் தோல்வியால் தூக்குப்போட்டு திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, 

ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்கிற சுஸ்மிதா (வயது 22). திருநங்கை. இவர் தனது அம்மா சின்னப்பொன்னுவுடன் வசித்து வந்தார்.

சுஸ்மிதாவுக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சுஸ்மிதா அந்த வாலிபரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து சுஸ்மிதா, அந்த வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள ஒப்புகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சுஸ்மிதா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஸ்மிதா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுஸ்மிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் தோல்வியால் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரியில் காதல் தோல்வியால் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி
காதல் தோல்வி : ”நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை” காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயத்தை காதலி அனுப்பி வைத்து உள்ளார்.
3. கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
கிருமாம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.