கன்னியாகுமரியில் ரூ.2 கோடி செலவில் புதிய படகு தளம் அமைப்பு
கன்னியாகுமரியில் ரூ.2 கோடி செலவில் புதிய படகு தளம் அமைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகில் மற்றொரு பாறையில 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் கண்டு ரசிக்க தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா என்ற 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் படகு நிறுத்தும் தளம் உள்ளது. ்
தற்போது இந்த தளத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 3 படகுகளும், விவேகானந்தா கேந்திராவுக்கு சொந்தமான ஏக்நாத் என்ற படகும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த படகு நிறுத்தும் தளம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகி விட்டதால் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கூடுதல் படகுகள் நிறுத்தவும் வசதிகள் இல்லை.
இந்தநிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் ரூ.2 கோடி செலவில் புதிதாக படகு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய படகு தளம் 90 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது.
தற்போது உள்ள படகுகள் தவிர மேலும் 2 படகுகள் நிறுத்தவும் இங்கு வசதி செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் 27-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் ராட்சத சிமெண்ட் கற்கள் தயாராகி வருகி றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story