உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 29 பேர் பதவி ஏற்பு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சேலம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 29 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 385 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3,597 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. 18 வார்டுகளிலும், தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ம.க. 4 வார்டுகளிலும், தே.மு.தி.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 1-வது வார்டு சாவித்ரி (அ.தி.மு.க.), 2-வது வார்டு கந்தசாமி (அ.தி.மு.க.), 3-வது வார்டு ரேவதி (பா.ம.க.), 4-வது வார்டு சந்திரசேகரன் (அ.தி.மு.க.), 5-வது வார்டு அண்ணாமலை (பா.ம.க.), 6-வது வார்டு வசந்தி (தி.மு.க.), 7-வது வார்டு புஷ்பராணி (தி.மு.க.), 8-வது வார்டு மல்லிகா (அ.தி.மு.க.), 9-வது வார்டு அழகிரி (தி.மு.க.), 10-வது வார்டு மணி (அ.தி.மு.க.), 11-வது வார்டு சின்னுசாமி (அ.தி.மு.க.), 12-வது வார்டு ராஜேந்திரன் (அ.தி.மு.க), 13-வது வார்டு சம்பூரணம் (அ.தி.மு.க.), 14-வது வார்டு சாந்தாமணி (அ.தி.மு.க.), 15-வது வார்டு தேன்மொழி (பா.ம.க.), 16-வது வார்டு பழனிசாமி (அ.தி.மு.க.),
17-வது வார்டு மாதேஸ்வரன் (அ.தி.மு.க.), 18-வது வார்டு கமலா (தே.மு.தி.க.), 19-வது வார்டு கீதா (தி.மு.க.), 20-வது வார்டு தில்லைக்கரசி (அ.தி.மு.க.), 21-வது வார்டு ஆர்.கலைச்செல்வி (அ.தி.மு.க.), 22-வது வார்டு ஜெயந்தி (பா.ம.க.), 23-வது வார்டு ம.கலைச்செல்வி (அ.தி.மு.க.), 24-வது வார்டு தங்கமணி (அ.தி.மு.க.), 25-வது வார்டு மீனா (தி.மு.க.), 26-வது வார்டு நல்லம்மாள் (தி.மு.க.), 27-வது வார்டு சந்திரலேகா ( அ.தி.மு.க.), 28-வது வார்டு இளங்கோவன் (அ.தி.மு.க.), 29-வது வார்டு ராஜா (அ.தி.மு.க.) என மொத்தம் 29 பேரும் தனித்தனியாக உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மகளிர் திட்ட அலுவலர் செல்வக் குமார், கால்நடைத்துறை மாவட்ட இணை இயக்குனர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா முடிந்து வெளியே வந்த மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சில உறுப்பினர்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வருகிற 11-ந் தேதி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story