உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர் விபத்தில் மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம்
கும்மிடிப்பூண்டி அருகே தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்பதற்கு முன்பு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஊராட்சி வார்டு உறுப்பினரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த மேல்முதலம்பேடு ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினராக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் அருண்பாண்டியன் (வயது 27). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்ட படிப்பும் படித்து வந்தார். அருண் பாண்டியனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆந்திர மாநிலம் தடா அருகே செல்லும் போது சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண்பாண்டியன், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அருண்பாண்டியனின் தாய் லட்சுமி மற்றும் குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகளான இதயம், இதய வால்வு, கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள், தோல் மற்றும் எலும்புகள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் ஒருவர் பதவி ஏற்பதற்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி முளைச்சாவு அடைந்தது மேல்முதலம்பேடு கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி முடிவடைந்தவுடன், அதில் கிடைத்த வெற்றியை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு அருண் பாண்டியன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். பின்னர் 3-ந் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆந்திர மாநிலம் தடா அருகே செல்லும் போது சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண்பாண்டியன், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அருண்பாண்டியனின் தாய் லட்சுமி மற்றும் குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகளான இதயம், இதய வால்வு, கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள், தோல் மற்றும் எலும்புகள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் ஒருவர் பதவி ஏற்பதற்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி முளைச்சாவு அடைந்தது மேல்முதலம்பேடு கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story