கிராம உதவியாளர்களுக்கு, ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
கிராம உதவியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் எஸ்.மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் எஸ்.மோகன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில பொருளாளர் ஆர்.கோவிந்தன், மாநில துணைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கிராம ஊழியர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story