பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம்,
முதல்-அமைச்சர் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்து அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ.1,000-த்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
மேலும் இதில் விடுபட்ட அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கப்படுவது தொடர்பான புகார்கள் ஏதுமிருப்பின் மாவட்ட மற்றும் வட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜகுரு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவி மேலாளர் சிவக்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளர் நடராஜன், பொது வினியோக திட்ட அலுவலக கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம்.
இதேபோல வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையில் ராமநாதபுரம் தாலுகா தனி தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல்) சபிதாள் பேகம், வட்ட வழங்கல் அலுவலர்கள் ராமேசுவரம் நம்புகாயத்திரி, திருவாடானை மீனாட்சி சுந்தரம், கீழக்கரை சேகு ஜலாலுதீன், ஆர்.எஸ்.மங்கலம் ரவிசந்தர், பரமக்குடி வரதன், முதுகுளத்தூர் மேகலா, கமுதி கதிரவன், கடலாடி லலிதா ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
முன்னதாக ராமநாதபுரத்தி்ல் நடந்த விழாவில் கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் ஒரு பயனாளிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
Related Tags :
Next Story