வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2020 3:15 AM IST (Updated: 7 Jan 2020 11:05 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.35 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகரில் வசித்து வருபவர் தங்கராஜ் (வயது51). இவர் வீட்டின் அருகில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசிக்கின்றனர். இதில் ஒரு மகன் போலீசாக உள்ளார். இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தங்கராஜ் மனைவியுடன் சென்னை சென்று விட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் உடனே சிவகங்கை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பெரிய கருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story