மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே, 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Near Hosur, 2 houses jewelry, cash theft

ஓசூர் அருகே, 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூர் அருகே, 2 வீடுகளில் நகை,பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர் அருகே 2 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடிசாகனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது38). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6½ பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் டி.வி. ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல், குடிசாகனபள்ளி அருகேயுள்ள கோகுல் நகரை சேர்ந்த முரளி(56) என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1½ பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நாகராஜ் மற்றும் முரளி ஆகியோர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகை கடைகளில் கொள்ளை: தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
2. கோவில் விழாவில் நகை திருடிய இளம்பெண் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவில்விழாவில்பெண்களிடம் நகை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. குலசேகரம் அருகே துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு
குலசேகரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை
கடலூரில் உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வேடசந்தூரில், ஓட்டுனர் பயிற்சி பள்ளி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
வேடசந்தூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை