மாவட்ட செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் + "||" + People Solving Meeting of the day

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.


இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனைப்பட்டா, பசுமை விடுகள், திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டு, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இதில் வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் கொடி நாள் நிதி வசூலாக பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை கலெக்டரிடம் அரசு அலுவலர்கள் வழங்கினார்கள்.

இதில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) டி.ஸ்ரீதர், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட வழங்கல் அதிகாரி கஸ்தூரி, தனித்துணை கலெக்டர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேலு மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கொள்ளையால் வெட்டாற்று பாலம் இடிந்து விழும் அபாயம் கிராம மக்கள் அச்சம்
மணல் கொள்ளையால் வெட்டாற்று பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
2. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு
புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் சமரசம் ஏற்பட்டது.
3. கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,186 வழக்குகளில் ரூ.6¼ கோடியில் தீர்வு
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,186 வழக்குகளில் ரூ.6 கோடியே 33 லட்சத்து 4 ஆயிரத்து 412 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
4. 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காமல் தவிப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
‘40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்க வில்லை‘ என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
5. 80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டி வந்த முதியவர்
80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டிக்கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு

அதிகம் வாசிக்கப்பட்டவை