கபிஸ்தலம் அருகே, தென்னந்தோப்பில் ஆயுதங்கள்-நாட்டு வெடி பதுக்கல்; 2 பேர் கைது


கபிஸ்தலம் அருகே, தென்னந்தோப்பில் ஆயுதங்கள்-நாட்டு வெடி பதுக்கல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2020 11:13 PM GMT (Updated: 7 Jan 2020 11:13 PM GMT)

கபிஸ்தலம் அருகே தென்னந்தோப்பில் ஆயுதங்கள், நாட்டு வெடியை பதுக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது38). இவர் உமையாள்புரம் மெயின் ரோட்டில் உள்ள தென்னந்தோப்பில் வெள்ளை பன்றிகள் வளர்த்து வருகிறார். இந்த தோப்பில் மர்ம நபர்கள் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், ஏட்டுகள் மோகன், சண்முகம், சிவகுமார், இளையராஜா, அருண், அழகு உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் நேற்று அந்த தோப்பில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடி கைப்பற்றப்பட்டது. இவற்றை பதுக்கி வைத்தது கார்த்தி, அதே பகுதியை சேர்ந்த விக்னே‌‌ஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கரிகாலசோழன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, விக்னே‌‌ஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே ஆட்டோ டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு ஒன்று கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story