திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், குளத்தில் குதித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், குளத்தில் குதித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 8 Jan 2020 5:05 AM IST (Updated: 8 Jan 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் பிரதீபா (வயது 22). பட்டதாரியான இவருக்கு வருகிற 30-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாடுகள் தொடர்பாக ரவிச்சந்திரன் வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பிரதீபாவை காணவில்லை.

இந்தநிலையில் பிரதீபா எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. அதில் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், எனது சாவை களங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த உருக்கமான கடிதத்தை படித்து கண்ணீர் மல்க பதறி போய் பிரதீபாவை தேடும் பணியில் ரவிச்சந்திரன் ஈடுபட்டார்.

அப்போது அதே பகுதியில் உள்ள பிடாரிக் குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து குளத்தில் கிடந்த பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story