பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்
x
தினத்தந்தி 9 Jan 2020 3:30 AM IST (Updated: 8 Jan 2020 11:14 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு மஞ்சள் குலைகள் தயாராக உள்ளன.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தில் சில விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சுமார் 10 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு உள்ளனர். 8 மாத பயிரான மஞ்சள் குலைகள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், மஞ்சள் குலைகள் சற்று சேதம் அடைந்தது. எனினும் தற்போது வெயில் அடிப்பதால், மஞ்சள் குலைகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மஞ்சள் குலைகளை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story