சிறுமியை மிரட்டி கற்பழித்த மந்திரவாதிக்கு 12 ஆண்டு கடுங்காவல்; சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண், அதே பகுதியை சேர்ந்த 42 வயது மந்திரவாதியை அணுகி தனது நிலைமையை விளக்கி உள்ளார்.
மும்பை,
மந்திரவாதி தான் சொல்கிறபடி கேட்டால் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்கள் விலகி செல்வம் பெருகும் என ஆசைவார்த்தை கூறினார். மேலும் அடிக்கடி அந்த பெண்ணை வரவழைத்து பூஜை செய்வதாக கூறி கற்பழித்து உள்ளார்.
இந்தநிலையில் தனது 12 வயது மகள் புத்திகூர்மை இல்லாமல் இருப்பதாக அப்பெண் மந்திரவாதியிடம் தெரிவித்தார்.
இதற்கு அவர் சிறப்பு பூஜை செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என கூறி, சிறுமியை தனது இடத்துக்கு வரவழைத்து மிரட்டி கற்பழித்து உள்ளார். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் மந்திரவாதி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், மந்திரவாதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story