சிந்துதுர்க் அருகே கடலில் படகு கவிழ்ந்து பெண் பலி; 8 பேர் மீட்பு


சிந்துதுர்க் அருகே கடலில் படகு கவிழ்ந்து பெண் பலி;  8 பேர் மீட்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 4:56 AM IST (Updated: 9 Jan 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

சிந்துதுர்க் அருகே கடலில் படகு கவிழ்ந்து பெண் பலியானார். 8 பேர் மீட்கப்பட்டனர்.

மும்பை,

தானே மற்றும் கல்யாணை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், நேற்று மதியம் 12 மணி அளவில் தேவ்பாக் சங்கம் கடற்கரையில் குழந்தைகள் உள்பட 9 பேர் ஒரு படகில் சவாரி செய்தனர். கடலில் படகு சென்றபோது, சூறாவளி காற்று வீசியது. மேலும் ராட்சத அலைகள் கடலில் எழுந்தது. இதனால் படகு தண்ணீரில் அங்கும் இங்குமாக தத்தளித்தது. இதனால் படகில் இருந்தவர்கள் அலறி சத்தம்போட்டனர்.

இந்தநிலையில் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தனர்.

இதை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து, அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 9 பேரையும் மீட்டு தங்கள் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

இதில், மயங்கிய நிலையில் இருந்த பெண் உள்பட 6 பேரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண் மாயா மானே (வயது60) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பத்லாப்பூரை சேர்ந்த சிறுமி அன்யா(3) தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story