கவர்னரின் கடமை மாறாது கிரண்பெடி வலைதள பதிவு


கவர்னரின் கடமை மாறாது கிரண்பெடி வலைதள பதிவு
x
தினத்தந்தி 9 Jan 2020 12:18 AM GMT (Updated: 2020-01-09T05:48:07+05:30)

பிரச்சினைகள் மாறினாலும் கவர்னரின் கடமை மாறாது என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என்ற செய்தி திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட காலத்தில் ஒரே இடத்தில் இருந்து வருகிறது. இது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதில் சொந்த கண்ணோட்டத்தை தவிர வேறு இல்லை.

பத்திரிகைகள் தனது வாசகர்களுக்காக அதை பிரசுரிக்கின்றன. மேலும் பொதுமக்களும் அதிக நாட்களுக்கு நினைவில் வைத்திருப்பதில்லை.

பிரச்சினைகள் மாறினாலும் கவர்னரின் கடமைகள் மாறாது. ஏனெனில் அது சட்ட பொறுப்புகளின் அடிப்படையிலானது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு பொறுப்புடன் இருக்கவேண்டும்.

பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பது, தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துவது போன்றவற்றை கவர்னர் அலுவலகம் முடிந்தவரை செய்கிறது. பொதுமக்களுக்காக பணியாற்றக்கூடிய சிறந்தவர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறது.

இதைத்தவிர தனிப்பட்ட அக்கறை ஏதும் இல்லை. ஜனாதிபதி, புதுச்சேரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இணங்க செயல்படுகிறோம். கவர்னர் மாளிகையின் கொள்கை நிலையானதாக இருப்பதே கவர்னரை திரும்பபெற கோருவதற்கான காரணமாக உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Next Story