வாணியம்பாடி புதூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் வழங்கினார்


வாணியம்பாடி புதூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Jan 2020 3:45 AM IST (Updated: 10 Jan 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி புதூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி புதூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடையில் ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முனிராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் விஜிலாபுரம், பெத்த வேப்பம்பட்டு, தேவஸ்தானம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் கோவி. சம்பத்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்தானம் கூட்டுறவு சங்க தலைவர் லட்சுமிகாந்தன், வேளாண்மை உற்பத்தியாளர் சங்க துணைத்தலைவர் கே.பி.மணி, இயக்குனர் சந்திரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story