பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது
x
தினத்தந்தி 9 Jan 2020 10:15 PM GMT (Updated: 9 Jan 2020 9:04 PM GMT)

மயிலாடுதுறையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், ஆர்.எம்.எஸ். தபால் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள் சங்கம், ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சாமிகணேசன், மகாலிங்கம், கமலக்கண்ணன், திருவேங்கடம், கோவிந்தராஜன், ராமகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story