மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரி மீது சிறுமி மானபங்க புகார் விவகாரம்: முதல்-மந்திரியின் கார் டிரைவர் பணி இடைநீக்கம் + "||" + Minority complaints to police officer: First-minister's car driver suspended

போலீஸ் அதிகாரி மீது சிறுமி மானபங்க புகார் விவகாரம்: முதல்-மந்திரியின் கார் டிரைவர் பணி இடைநீக்கம்

போலீஸ் அதிகாரி மீது சிறுமி மானபங்க புகார் விவகாரம்: முதல்-மந்திரியின் கார் டிரைவர் பணி இடைநீக்கம்
புனேபோலீஸ் டி.ஐ.ஜி. மீது மானபங்க புகார்கூறியசிறுமியின் பெற்றோரை மிரட்டிய முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேயின் கார் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மும்பை, 

புனே போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் மீது நவிமும்பை தலோஜா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மானபங்க புகார் அளித்து இருந்தார். தந்தையின் நண்பரான போலீஸ் அதிகாரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுமியின் வீட்டில் வைத்து அவரை மானபங்கம் செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் போலீஸ் அதிகாரி மீது புகார் அளித்த சிறுமி திடீரென மாயமானார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இதில், தனது தற்கொலைக்கு காரணம் டி.ஐ.ஜி. தான் என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று போலீஸ் அதிகாரி மீது மானபங்க புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கார் டிரைவர் தின்கர் சால்வே என்பவர் சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்களை புகார் தொடர்பாக மிரட்டிச்சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்
சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2. குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
சேலத்தில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.