மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார் + "||" + The task of shaking the pilgrims to the Holy Hajj; First-Minister Yeddyurappa is Inaugurated

புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்

புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
புனித ஹஜ் யாத்ரீகர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு, 

மெக்கா புனித யாத்திரைக்கு செல்பவர்களை ஆன்லைன் குலுக்கல்முறையில்தேர்வு செய்யும் பணி தொடக்க விழா பெங்களூருவில் ஹஜ் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த பணியை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு 6,734 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்துள்ளேன். கலபுரகியில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாக மெக்காவுக்கு புறப்பட ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மத்திய விமானத்துறை மந்திரியுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிைடயாது. எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம். முஸ்லிம்களில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கு நான் பொறுப்பேற்க தயாராக உள்ளேன்.

ஹஜ் பவனில் புதிய கட்டிம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். வருகிற பட்ஜெட்டில் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். உங்களின் கோரிக்கைகளை 24 மணி நேரத்தில் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதில் பேசிய ஹஜ் கமிட்டி தலைவர் ரோஷன் பெய்க், ‘‘இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து 6,734 பேர் மெக்கா புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்ரீகர்கள் ேதர்வு செய்யப்படுகிறார்கள். யாத்ரீகர்கள், ஐதராபாத்திற்கு சென்று அங்கிருந்து மெக்கா செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் கலபுரகியில் இருந்து நேரடியாக மெக்கா செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் ; முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டம்
வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அமித்ஷாவின் அனுமதி கிடைத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்று விவாதிப்பேன் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
2. கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் எடியூரப்பா; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்திற்கு எடியூரப்பா துரோகம் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
3. மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது; முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள சி.டி. போலியானது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. எடியூரப்பா டெல்லி பயணம் திடீர் ரத்து; கட்சி மேலிடம் அனுமதி மறுப்பு?
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல இருந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
5. கர்நாடக மந்திரிசபை 17-ந் தேதி விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்படும் என்றும் வருகிற 17-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.