மாவட்ட செய்திகள்

பா.ஜனதா கூட்டணியில் நவநிர்மாண் சேனா? தேவேந்திர பட்னாவிஸ் பதில் + "||" + Navnirman Sena joins BJP alliance? Devendra Patnavis answers

பா.ஜனதா கூட்டணியில் நவநிர்மாண் சேனா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்

பா.ஜனதா கூட்டணியில் நவநிர்மாண் சேனா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவும் சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
மும்பை,

பாரதீய ஜனதா கூட்டணியில் ராஜ்தாக்கரே இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ராஜ்தாக்கரேவை சந்திக்கவில்லை. அவருடன் கூட்டணி வைக்கும் எந்த திட்டமும் இல்லை. அவர்கள் எங்களுடைய கொள்கையில் இருந்து வேறுபட்ட கொள்கையை பின்பற்றுகிறார்கள். இருப்பினும் பல்வேறு பிரச்சினைகளில் நாங்கள் கவனம் செலுத்துவதை அவர் கருத்தில் கொள்ளும்பட்சத்தில் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இதுகுறித்து சிந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா ஆட்சியில் ஊழல் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி - விசாரணைக்கு பயப்படமாட்டோம்
முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் நடந்தது என காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதற்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.
2. மாணவர்கள் போராட்டத்தில் ‘சுதந்திர காஷ்மீர்' பதாகை: பட்னாவிஸ்- ஜெயந்த் பாட்டீல் இடையே டுவிட்டரில் மோதல்
‘கேட்வே ஆப் இந்தியா’வில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுதந்திர காஷ்மீர் வாசகம் அடங்கிய பதாகை இடம் பெற்றிருந்தது தொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மந்திரி ஜெயந்த் பாட்டீலும் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.
3. சிஏஏ குறித்து முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி : பாஜக குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்கள் இடையே தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
4. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு
சரத்பவார் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து, பாதி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
5. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு
ரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.