மாவட்ட செய்திகள்

பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி + "||" + Not a single tree is cut in Aurangabad Park for the Balthakare monument; Interview with First-Minister Uttav Thackeray

பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி

பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது.
மும்பை,

பூங்காவில் உள்ள 1,000 மரங்கள் இதற்காக வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சிவசேனாவை காட்டமாக சாடினார். 

மரங்கள் வெட்டப்படும் விவகாரத்தில் சிவசேனா வெளிவேஷம் போடுவதாகவும், தங்களது தேவைக்காக மரங்களை வெட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்றும் விமர்சித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து பால்தாக்கரே நினைவு சின்னம் அமைக்கும் பணிக்காக பிரியதர்ஷினி பூங்காவில் மரங்களை வெட்டக்கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பால்தாக்கரே நினைவுசின்னம் அமையும் பிரியதர்ஷினி பூங்காவிற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் இந்த பூங்காவில் ஒரு மரத்தை கூட வெட்ட மாட்டோம். அதற்கு பதிலாக இன்னும் அதிகளவில் மரங்களை நடப்போகிறோம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது என பதிலடி கொடுத்தார்.
2. சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
3. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது
சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு வருகிற 23-ந் தேதி மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது.
4. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5. உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு
உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.