பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.
தென்காசி,
பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் மற்றும் மத்தளம்பாறையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பரிசு தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடையம் அருகே பாப்பான்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் முன்னாள் எம்.பி. பிரபாகரன், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலையை சேர்ந்த 21 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் கூட்டுறவு சார்பதிவாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சரவணகுமார், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சுரண்டை அருகே வீராணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிடாரக்குளம் கூட்டுறவு சங்க தலைவர் நெல்வீரபாண்டியன் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் இயக்குனர் அப்துல் முத்தலிப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவில்- சிவகிரி
சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் நெல்லை கூட்டுறவு பேரங்காடி இணை இயக்குனர் வேலுச்சாமி, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் அதன் தலைவர் ராமநாதன், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகிரி தாலுகா தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனரும், வாசுதேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான மூர்த்திபாண்டியன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் புதுக்காலனியில் நடந்த விழாவுக்கு சங்க செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story