உறுப்பினர்கள் சமநிலையில் ஆதரவு தெரிவித்ததால் வரவணை ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு
உறுப்பினர்கள் சமநிலையில் ஆதரவு தெரிவித்ததால் வரவணை ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
தரகம்பட்டி,
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி மன்றத்தில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இதில் பாப்பணம்பட்டியை சேர்ந்த மோகன்குமார் என்பவரும், மே.த.வெள்ளப்பட்டியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் போட்டியிட்டனர். துணைத்தலைவரை தேர்ந் தெடுப்பதற்கு ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சமநிலையில் ஆதரவு தெரிவித்ததால் யார் துணைத்தலைவர் என்ற போட்டி நிலவியது.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
குலுக்கல் முறையில் தேர்வு
பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் வரவணை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குலுக்கல் முறையில் துணைத்தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாப் பணம்பட்டியை சேர்ந்த மோகன்குமார் வெற்றி பெற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Tags :
Next Story