மாவட்ட செய்திகள்

மதுரை அருகே பயங்கரம் கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற பெண் காதலனுடன் கைது + "||" + Woman loses her 5-year-old son to death

மதுரை அருகே பயங்கரம் கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற பெண் காதலனுடன் கைது

மதுரை அருகே பயங்கரம் கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற பெண் காதலனுடன் கைது
கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றது தொடர்பாக அவனுடைய தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது28).இவரது மனைவி ஆனந்தஜோதி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய மகன் ஜீவா (5), மகள் லாவண்யா (3).


ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஆனந்தஜோதி விருதுநகரில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். ஜீவா குச்சம்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான்.

சம்பவத்தன்று ஜீவா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளான்.பின்னர் மாலையில் தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியுள்ளார். அப்போது ஜீவா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததாக கூறி சிகிச்சைக்கு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ராம்குமார் உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு ஜீவாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் ஜீவா இறந்து பலமணி நேரம் ஆகியுள்ளது என்றும் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கிய தடயமும், நகக் கீறல் உள்ளதாக தெரிவித்தார்.

இதைகேட்டு ராம்குமார் அழுது புரண்டார். பின்னர் அவர் இதுகுறித்து மனைவி ஆனந்தஜோதியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆனந்தஜோதி, ஜீவா தன்னுடன் மதிய வேளையில் படுத்து தூங்கினான், பின்னர் தான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது ஜீவா அசைவில்லாமல் இருந்தான் என்று கூறியுள்ளார்.

சாவில் சந்தேகம்

இதனால் சந்தேகம் அடைந்த ராம்குமார் இதுகுறித்து வி.சத்திரப்பட்டி போலீசில் தனது மகன் ஜீவா சாவு குறித்தும், தனது மனைவி ஆனந்தஜோதி மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்தார்.

உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஆனந்தஜோதியை அழைத்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆனந்தஜோதிக்கும், ராம்குமார் உறவுக்காரர் மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நெருக்கமாக இருந்ததை ஜீவா பார்த்துள்ளான். இதனால் தங்கள் கள்ள தொடர்பு ராம்குமாருக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர். இதனால் ஆனந்தஜோதியும், மருதுபாண்டியும், சேர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஜீவாவின் வாயை பொத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தஜோதி,மருதுபாண்டி ஆகிய 2 பேரையும் வி.சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்காக மகனையே ெகான்றுவிட துணிந்த பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை 2 பேர் கைது
திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. செல்போன் எண்ணுடன் கல்லூரி மாணவி பெயரில் ஆபாச முகநூல் கணக்கு என்ஜினீயர் கைது
தன்னுடன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக ஆபாச முகநூல் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
3. திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் கைது
திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
4. சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது
சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது.
5. அம்பையில் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலி கொலை வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
அம்பையில் கள்ளக்காதலி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்ததாக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.