கவர்னர் மாளிகையில் பொங்கல் திருவிழா - கிரண்பெடி மாட்டு வண்டியில் வலம் வந்தார்


கவர்னர் மாளிகையில் பொங்கல் திருவிழா - கிரண்பெடி மாட்டு வண்டியில் வலம் வந்தார்
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 12 Jan 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதில் கிரண்பெடி மாட்டு வண்டியில் அமர்ந்து கவர்னர் மாளிகையை வலம் வந்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பொங்கல் திருவிழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். விழாவுக்கு வந்தவர்களை கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் வரவேற்றார்.

இதில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கவர்னர் கிரண்பெடி பொங்கல் வைத்தார். அப்போது விழாவில் பங்கேற்றவர்கள் ‘பொங்கலோ’ ‘பொங்கலோ’ என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

இதனை தொடர்ந்து பாரம்பரிய சமையல் போட்டி, கோலப்போட்டி, உறியடி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் முடிவில் கவர்னர் கிரண்பெடி மற்றும் பலர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அமர்ந்து கவர்னர் மாளிகை வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். கவர்னரின் கூடுதல் செயலர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

Next Story