3 ஒன்றியங்களை கைப்பற்றிய தி.மு.க. கவுன்சிலர்கள்


3 ஒன்றியங்களை கைப்பற்றிய தி.மு.க. கவுன்சிலர்கள்
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 12 Jan 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் தி.மு.க. 3 இடங்களில் மட்டுேம ஒன்றிய தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை,

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுவில் 14 உறுப்பினர்கள் பதவி உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தி.மு.க. சார்பில் 7 பேரும், அ.தி.மு.க. சார்பில் 5 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒருவரும், அ.ம.மு.க. சார்பில் ஒருவரும் வெற்றிபெற்றனர். ஒன்றிய தலைவர் பதவிக்கு 8 கவுன்சிலர்கள் தேவை. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் லதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். துணைத்தலைவராக தி.மு.க. கவுன்சிலர் முத்துச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்லல்

கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 16 குழு உறுப்பினர்களில் அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், தி.மு.க. சார்பில் 7 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் உள்ளனர். ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் பிரேமாவும், தி.மு.க. சார்பில் சொர்ணமும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. கவுன்சிலர் சொர்ணம் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகவடிவேல் வெற்றி ெபற்று திருப்பத்தூர் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் துணைத்தலைவராக தி.மு.க. கவுன்சிலர் மீனார் தேர்வாகினார்.


Next Story