மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல் + "||" + Emphasize damage to the newly built jetty bridge on the ground floor

கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்

கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதமடைந்துள்ளது. முக்கிய பகுதியான இங்கு பெரும் விபத்து ஏற்படும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கீழக்கரை,

கீழக்கரையில் பழைய ஜெட்டி பாலம் சேதமடைந்து இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடியே 31 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் தரைப்பகுதி சில மாதங்களிலேயே சேதமடைந்தது.


மேலும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல பாலத்தின் அருகே அலைகளின் வேகத்தை தடுப்பதற்காக கட்டப்பட்ட தடுப்பு சுவரும் சேதமடைந்து விட்டன. இந்த ஜெட்டி பாலம் கட்டப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்திருப்பது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவர் முகமது இபுராகீம் என்பவர் கூறியதாவது:- கீழக்கரையில் உள்ள மீனவர்கள் நலன் கருதி பெரும் பொருட்செலவில் புதிதாக ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைய தொடங்கி விட்டது.

சீரமைக்க வேண்டும்

இந்த சேதங்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த பாலத்தில் மேலும் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் தடுப்பு சுவரும் இடிந்துள்ளது.

மீனவர்கள் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் இந்த பாலத்தின் அருகில் தான் நிறுத்தி இறக்கப்படுகிறது. அந்த மீன்களை ஏற்றி செல்ல இந்த பாலத்தில் வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் ஜெட்டி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், பாலம் மேலும் சேதமடைந்து பெரும் விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஜெட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு
பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2. இந்தோனேசியாவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் சாவு
இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. போராட்டத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம்: ரூ.6¼ லட்சத்துக்கு காசோலை வழங்கிய முஸ்லிம்கள்
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக, ரூ.6¼ லட்சத்துக்கான காசோலையை முஸ்லிம்கள் வழங்கி உள்ளனர்.
4. கோர்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதம் போலீஸ் நிலையம் முற்றுகை
கோர்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்திரமேரூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
5. மாடு மேய்ந்ததால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் சாலை மறியல்
திருக்காட்டுப்பள்ளி அருகே மாடு மேய்ந்ததால் நெல் வயல்கள் சேதம் அடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.