மாவட்ட செய்திகள்

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு + "||" + 10¼ pound jewelery stolen from door of house in Urayur

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு

உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,

திருச்சி உறையூர் சீனிவாச நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றார். பின்னர் 9-ந் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார்.


அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10¼ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து உறையூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தடயங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசார் வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பி கைது
திருப்பூர் போயம்பாளையம் அருகே கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2. சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகை திருட்டு
சிறுவாச்சூரில் 2 வீடுகளில் 6¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள், ஆட்டோ சக்கரங்கள் திருட்டு
திருச்சியில் ஆட்டோ சக்கரங்கள் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. வேப்பந்தட்டை அருகே வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்
வேப்பந்தட்டை அருகே வரதராஜபெருமாள் கோவில் உண்டியலை மர்ம நபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
வேலூரில் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை