மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது + "||" + Appreciation ceremony for the first-minister, uddhav thackeray; On behalf of Sivasena at 23rd date

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா; சிவசேனா சார்பில் 23-ந் தேதி நடக்கிறது
சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு வருகிற 23-ந் தேதி மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது.
மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது. பின்னர் நடந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

இந்த புதிய அரசு கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி அன்று மராட்டிய புதிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மும்பை பாந்திரா - குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் செய்து வருகிறார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவார் என மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு உத்தவ் தாக்கரே சத்தியம் செய்து கொடுத்து இருந்தார். அந்த சத்தியத்தை உத்தவ் தாக்கரே நிறைவேற்றி உள்ளார். இதனால் சிவசேனா தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனாவினர் நடத்தும் பாராட்டு விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பாராட்டு விழாவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்று மந்திரி அனில் பரப் பதில் அளித்தார்.

உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டு விழா நடைபெறும் 23-ந் தேதி அன்று தான் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜ்தாக்கரே தனது மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் மாநில அளவிலான மாநாட்டை நடத்துகிறார்.

அப்போது, கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்தாக்கரே முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்னாவிஸ் கிண்டல் அடித்த விவகாரம்: ‘3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது’ உத்தவ் தாக்கரே பதிலடி
தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 3 சக்கர வாகன அரசு சரியாக இயங்குகிறது என பதிலடி கொடுத்தார்.
2. சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைபிடிக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
சாலை பாதுகாப்பை வாழ்நாள் பணியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
3. பால்தாக்கரே நினைவு சின்னத்துக்காக அவுரங்காபாத் பூங்காவில் ஒரு மரம் கூட வெட்டப்படாது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது.
4. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை: மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5. உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு
உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபையில் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.