மாவட்ட செய்திகள்

28 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் + "||" + Pongal Gift Package Minister RB Udayakumar inaugurated 28,000 people

28 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

28 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 28 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பேரையூர்,

டி.கல்லுப்பட்டி, பேரையூர், சந்தையூர், சிலைமலைபட்டி, எம்.சுப்புலாபுரம், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் 27,969 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.


அப்போது அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசு கடந்த 2 வருடங்களாக பொங்கல் பரிசினை வழங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஜெயலலிதாவின் கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி தேர்தலில் வழங்கி இன்றைக்கு பெண்கள் அதிகஅளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர். 5 முறை ஆட்சி செய்த தி.மு.க. பொங்கல் பரிசினை கொடுத்தார்களா, இன்றைக்கு 2 கோடி பேருக்கு பொங்கல் பரிசினை தந்தது அ.தி.மு.க. அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர்

நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் வினய், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், துணை பதிவாளர் மதி, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் சண்முகப்பிரியா பாவடியான், மாவட்ட கவுன்சிலர் செல்வராணி செல்லச்சாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், டி.கல்லுப்பட்டி நகர் செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரையூர் நகர் செயலாளர் நெடுமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் 460 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வழங்கினார்.