மாவட்ட செய்திகள்

வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + Driver committing suicide by drinking poison in alcohol near Vepur

வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை

வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
வேப்பூர் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்,

வேப்பூர் அருகே மா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சூரியா (வயது 25) நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது தந்தை செல்வராஜிடம் தனக்கு சொந்தமாக நெல்அறுவடை எந்திரம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பொங்கல் பண்டிகை முடிந்ததும் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சூரியா மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.


போலீசார் விசாரணை

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூரியா பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து செல்வராஜ் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்றம் தண்டவாளத்தில் கட்டையைப் போட்டு எக்ஸ்பிரஸ், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
2. போலீசாருக்கு விளையாட்டு போட்டிகள்: போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நடவடிக்கை
போலீசாரின் மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கான விளையாட்டு போட்டிகளை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நடவடிக்கை எடுத்தார்.
3. மேச்சேரி அருகே நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
மேச்சேரி அருகே நடுரோட்டில் முதியவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை
திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே புகையிலை பொருட்களை கடத்தி வந்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. குரூப்-4 முறைகேடு விவகாரம்: முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைப்பு
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வில் முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.