வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா


வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2020 3:00 AM IST (Updated: 13 Jan 2020 7:31 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.

வாணியம்பாடி 

வட்ட வழங்கல் அலுவலர் குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்ட தலைவர் பார்த்திபன், வட்ட செயலாளர் நீலமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சற்குணகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் திலீப், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story