மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே, புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை + "||" + Near Namagiripettai, new groom Suicide by drinking poison

நாமகிரிப்பேட்டை அருகே, புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே, புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை,

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி செவ்வாப்பாடிபுதூரை சேர்ந்தவர் சுகனேஸ்வரன் (வயது 25). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சத்தியா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்றதில் இருந்தே கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சுகனேஸ்வரன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார். திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவோணம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
திருவோணம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.
2. காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை தந்தை வெறிச்செயல்
உத்தனப்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
3. பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை
பாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. சுரண்டை அருகே பரிதாபம்: வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
சுரண்டை அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
5. காருடன் தீயில் கருகிய புதுமாப்பிள்ளை சாவில் திடீர் திருப்பம்
காருடன் தீயில் கருகி புதுமாப்பிள்ளை இறந்த வழக்கில் அவர் தற்கொலை செய்துகொண்ட விவரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.