தனது கருத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் தொடர்பு இல்லை; காங்கிரஸ் பெண் மந்திரி விளக்கம்


தனது கருத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் தொடர்பு இல்லை; காங்கிரஸ் பெண் மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:15 PM GMT (Updated: 13 Jan 2020 7:57 PM GMT)

பசுவை தொடுவதால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் என்ற தனது கருத்துக்கும், மூடநம்பிக்கைக்கும் தொடர்பு இல்லை என காங்கிரஸ் பெண் மந்திரி யசோமதி தாக்குர் விளக்கம் அளித்து உள்ளார்.

மும்பை,

மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்குர் அமராவதி மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பசுவை தொடுவதால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் என்று பேசியிருந்தார். அவரது இந்த கருத்து மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மந்திரி யசோமதி தாக்குர் தனது பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் எனது தொகுதியில் பசுவுக்கு என்று கோவில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கு கிராமமக்கள் மத்தியில் பேசும் போது, செல்லப்பிராணிகள் மீதான அவர்களின் உணர்வுகளை தான் எதிரொலித்தேன். நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் தான். விலங்குகளை தொடுவதை என்னை போலவே பலர் நல்லதாகவே உணர்கிறார்கள்.

எனவே எனது கருத்துக்களுக்கும், மூடநம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது கருத்துக்கள் ஏன் இப்படி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டேன். நான் இந்துவாக பிறந்த ஒரு காங்கிரஸ் தொண்டர். நான் பொட்டு வைத்துக் கொள்கிறேன். நெக்லஸ் அணிந்து கொள்கிறேன். நான் தர்காவுக்கும் சென்று வருகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story