மாவட்ட செய்திகள்

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள் + "||" + Is smokeless To celebrate the bogey At the request of the Collector

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 

ஆனால் தற்பொழுது போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, இன்று கொண்டாடப்படும் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
விருதுநகரில் கலெக்டர் கண்ணன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
2. கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.11 கோடி நலத்திட்ட உதவி - கலெக்டர் தகவல்
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. தாட்கோ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. காய்கறி, பழங்களை சாகுபடி செய்ய சிறப்பு திட்டம் - கலெக்டர் கண்ணன் தகவல்
காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
5. அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.