மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது + "||" + Mayiladuthurai Involved in robbery 2 AP women arrested

மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது

மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 70). இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்து ரூ.300-ஐ 2 பெண்கள் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த 2 பெண்களையும் பிடித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்களிடம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த ராஜு மனைவி அம்மு (25), வெற்றிவேல் மனைவி முத்துமாரி (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மு, முத்துமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் வழிப்பறி செய்த ரூ. 300-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது - கோர்ட்டில் ஒருவர் சரண்
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2. திரிசூலத்தில் விற்க முயன்ற கிருஷ்ணர் சிலை மீட்பு 2 பேர் கைது
திரிசூலத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்த கிருஷ்ணர் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
3. வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
4. மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டிய 2 பேர் கைது - போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டி வந்த 2 பேர் வாகன சோதனையினால் சிக்கினர்.
5. வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது - 27 பவுன் நகை பறிமுதல்
வத்தலக்குண்டு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 27 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.