சமூக சீரழிவுக்கு காரணமான டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு


சமூக சீரழிவுக்கு காரணமான டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு
x
தினத்தந்தி 14 Jan 2020 3:50 AM IST (Updated: 14 Jan 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

சமூக சீரழிவுக்கு காரணமான டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காங்கேயம் பகுதியை சேர்ந்த தம்பதி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

10-ம் வகுப்பு வரை படித்து இருந்த எங்களது மகளிடம் பல்லடம் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த வாலிபர் வேல்முருகன் என்பவர் டிக்-டாக் செயலி மூலம் தொடர்பு ஏற்படுத்தி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக கர்ப்பமடைந்த எனது மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எனது மகள் தற்கொலைக்கு காரணமான வேல்முருகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே வேல்முருகன் ஜாமீனில் வந்தால் எங்களை மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வேல்முருகனுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் எங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக சீரழிவிற்கு காரணமான டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story