ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ; போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 15 Jan 2020 3:45 AM IST (Updated: 14 Jan 2020 10:37 PM IST)
t-max-icont-min-icon

கிராமசபை கூட்டங்களில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, இலுப்பூர் மற்றும் கீரனூர் உட்கோட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.  இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தலைமை தாங்கி பேசுகையில், 

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். கிராம சபை கூட்டங்களில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். எனக்கு என்று உளவுத்துறை ஆட்கள் உள்ளனர். ஆனால் எனக்கு நீங்கள் உளவுத்துறை. எந்தஒரு தகவலாக இருந்தால், புகாராக இருந்தாலும் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் என்னிடம் தெரிவிக்கலாம். அனைவரும் காவலன் செயலி மற்றும் ஹோலோ போலீஸ் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றார். 

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story