மாவட்ட செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டிபெங்களூரு லால்பாக்கில் 17-ந் தேதி மலர் கண்காட்சிமுதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார் + "||" + In line with Republic Day Flower Exhibition at Lalbagh, Bangalore 17th

குடியரசு தின விழாவையொட்டிபெங்களூரு லால்பாக்கில் 17-ந் தேதி மலர் கண்காட்சிமுதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்

குடியரசு தின விழாவையொட்டிபெங்களூரு லால்பாக்கில் 17-ந் தேதி மலர் கண்காட்சிமுதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்
குடியரசு தின விழாவையொட்டி பெங்களூரு லால்பாக்கில் வருகிற 17-ந்தேதி மலர் கண்காட்சியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,

குடியரசு தின விழாவையொட்டி பெங்களூரு லால்பாக்கில் வருகிற 17-ந்தேதி மலர் கண்காட்சியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பி.வெங்கடேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மலர் கண்காட்சி

1912-ம் ஆண்டு முதல் பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 முறை அதாவது குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய தினங்களில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி 211-வது மலர் கண்காட்சிக்கு லால்பாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 17-ந் தேதி பகல் 12 மணிக்கு இந்த கண்காட்சியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி 26-ந் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு சுவாமி விவேகானந்தரை மையமாக வைத்து இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் தோட்டக்கலைத்துறை மந்திரி சோமண்ணா, மேயர் கவுதம்குமார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் மண்டபம்

இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான அரங்கத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த படம் மக்களுக்கு காட்டப்படுகிறது. 5 லட்சம் கையேடுகள், கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். சுவாமி விவேகானந்தரை பற்றி ஆவண படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த கண்காட்சியின் முத்தாய்ப்பாக 3.30 லட்சம் மலர்களால் சுவாமி விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. மலர்கள் மூலம் மயில், குடைகள், பிரமிடுகள், மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொட்டிகள் கண்காட்சியில் இடம் பெறும். இது பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

கண்காட்சி நடைபெறும் நாட்களில் வாகனங்கள் உள்ளே வர அனுமதி இல்லை. பள்ளி வாகனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மட்டும் டபுள்ரோடு நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படும். சாந்திநகர் பஸ் நிலையத்தில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். ஜே.சி.ரோடு வழியாக வருபவர்கள், அதே ரோட்டில் உள்ள மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டிடத்தில் நிறுத்த வேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள், அல்அமீன் கல்லூரி மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டக வசதியும் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். செல்போன், கேமராக்கள் கொண்டுவர தடை இல்லை. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி இல்லை. 17, 19, 25, 26 ஆகிய நாட்களை தவிர மற்ற நாட்களில் பள்ளி வாகனங்கள் லால்பாக்கிற்குள் அனுமதிக்கப்படும். பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வருவதற்கு முன்பு, தங்களின் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைக்க வேண்டும்.

லால்பாக்கிற்குள் பழம், உலர்ந்த பழங்கள், திராட்சை, மாம்பழ ஜூஸ், குடிநீர் ஆகியவை கிடைக்கும். 5 இடங்களில் மட்டுமே உணவு பகுதிகள் அமைக்கப்படும். கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை இரவு 7 மணிக்கு மூடப்படும். இதையொட்டி லால்பாக்கிற்குள் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நுழைவு கட்டணம்

பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சந்தேகத்திற்கு இடமான நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். பார்வையாளர்கள் மலர் செடிகள், விதைகள் உள்ளிட்டவற்றை வாங்கி செல்லலாம். பார்வையாளர்கள் நுழைவு கட்டணமாக பெரியர்களுக்கு ரூ.70, சிறுவர்களுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பி.வெங்கடேஷ் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை