மாவட்ட செய்திகள்

தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது + "||" + Worker beat and killed ; Five arrested including boy

தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது

தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் நடுதெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ரவி(வயது 41). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கொளஞ்சி(44) என்பவர் வீட்டிற்கு சென்று அவரது மனைவி சுசீலாவிடம் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த கொளஞ்சிக்கும், ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவியை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, கொளஞ்சி, உறவினர் ராயர்(65), இவரது மகன் ரமேஷ்(25), முத்தையன்(24) மற்றும் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.
2. மும்பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம்; தாயை கொன்று உடலை வெட்டி வீசிய மகன் கைது
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற தாயை கொலை செய்ததாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர செயல் குறித்த நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது
டெல்லி போலீஸ் சிறப்பு படையினர் குடியரசு தின விழாவையொட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வாசிராபாத் பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர்.
4. சிவசேனா பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
மும்பை விக்ரோலி தாகுர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஜாதவ்(வயது55). சிவசேனா கட்சி பிரமுகரான இவர், சம்பவத்தன்று காலை தன் வீட்டருகே உள்ள சாய்நாத் கோவிலுக்கு வந்திருந்தார்.
5. மாவட்டத்தில் 4 இடங்களில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 771 பேர் கைது
மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 771 பேரை போலீசார் கைது செய்தனர்.