நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை


நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 7:18 PM GMT)

நெல்லையில் டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நெல்லை, 

மதுரை மண்டல டாஸ்மாக் சிறப்பு பறக்கும் படை உதவி கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். நெல்லை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 கடைகளில் இந்த சோதனை நடத்தினார்கள்.

மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா?, அந்த கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மது வகைகள்தான் விற்கப்படுகிறதா? இருப்பு சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் கடைகளையொட்டி அமைந்திருக்கும் பார்களில் அடிப்படை வசதிகள், அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினார்கள்.

அப்போது குடிமகன்கள் சிலர் தங்களிடம் மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பார்களில் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறைகளை தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது குறைபாடுகள் காணப்பட்ட கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story