அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்


அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2020 3:00 AM IST (Updated: 15 Jan 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கருத்துரை ஆற்றினார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக தமிழக அமைச்சரவையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். 

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்து புறநோயாளிகள் பிரிவை 24 மணி நேரம் செயல்பட வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள், தெருக்களில் குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் சுகாதார கேட்டை விளைவித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.


Next Story