கள்ளக்குறிச்சி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா


கள்ளக்குறிச்சி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 8:13 PM GMT)

கள்ளக்குறிச்சி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி செயலாளர் லட்சுமி கந்தசாமி தலைமை தாங்கினார். தாளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். விழாவில் பொங்கல் வைத்து படையல் வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோலம், மெகந்தி, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முருகா பாலிடெக்னிக் கல்லூரி

கள்ளக்குறிச்சி அருகே மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா தாளாளர் ரஹமத்துல்லா தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

அரசு மருத்துவமனை

கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பழமலை தலைமை தாங்கினார். டாக்டர்கள் கணேஷ் ராஜா, முத்துக்குமார், பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் செவிலியர் சங்க மாநில தலைவர் சக்திவேல், செவிலியர்கள் நாகலட்சுமி, ராணி, சுசீலா, ஆய்வக நுட்புநர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் கென்னடி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஆரோக்கிய லோன்சினோஸ் வரவேற்றார். இதில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கலந்துகொண்டு பள்ளிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை நினைவு பரிசாக வழங்கினார். பொங்கல் விழாவையொட்டி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஆனந்த் விமல்ராஜ், ஜான்சன், லில்லி புஷ்பம், அசோக் குமார், நூர்ஜஹான், பிரான்சிஸ் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்ட னர். திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி தலைமையிலும், திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர்கள் முன்னிலையிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Next Story